கனமழையால் ரஜினியின் அண்ணாத்த படத்துக்கு நேர்ந்த சிக்கல்..!

 
ரஜினிகாந்த்

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ பட வசூல் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.

கடந்த தீபாவளி பண்டிகைக்கு ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் முதல் வாரத்தில் ரூ. 76 கோடி வசூலை ஈட்டியது.

வரும் வாரங்களில் இந்த படத்தின் வசூல் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ்நாடு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உள்ளிட வட தமிழக மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புகளை சந்தித்துள்ளன.

இதேநிலை மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நீடிக்கின்ரன. இதன்காரணமாக அண்ணாத்த படத்தில் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே உலகம் முழுவதும் படம் ரூ. 70 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இரண்டு நாள் முடிவில் படம் ரூ. 100 கோடி வசூலிக்க ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

ஆனால் நேற்றைய நிலவரப்படி அண்ணாத்த படம் ரூ. 2 கோடி வரை மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. மழை நின்றால் மட்டுமே மக்கள் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி, மீண்டும் திரையரங்குகள் வர தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From Around the web