சல்மான் கானை தடுத்து நிறுத்திய ராணுவ அதிகாரிக்கு ஏற்பட்ட சிக்கல்..!

 
சல்மான் கானை தடுத்து நிறுத்திய சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி

நடைமுறையை பின்பற்றாமல் விமான நிலையத்தில் நுழைய முயன்ற சல்மான் கானை தடுத்து நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்த பின்னர் அனுப்பி வைத்த ராணுவ அதிகாரிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைஃப் இருவரும் டைகர் 3 படத்துக்காக ரஷ்யா சென்றுள்ளனர். முன்னதாக இந்தியாவில் இருந்து ரஷ்யா கிளம்புவதற்காக சல்மான் கான் விமான நிலையத்துக்கு வந்தார்.

அப்போது வரிசையில் நிற்காமல் நேராக புறப்பாடு பகுதிக்குள் செல்ல முயன்றார் சல்மான். அவரை திருப்பி வரிசையில் வரும் படி ஒரு இளம் சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி கூறினார். வரிசையில் வந்த சல்மான், மீண்டும் நேராக புறப்பாடு பகுதிக்குள் செல்ல முயன்றார்.


அப்போது அவரை தடுத்த நிறுத்திய அந்த இளம் அதிகாரி ஆவணங்களை சரிபார்த்த பின்னர் சல்மான் கானை உள்ளே அனுப்பி வைத்தார். இதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. சமூகவலைதளங்களில் அந்த இளம் அதிகாரியை ரசிகர்கள் கொண்டாடினர்.

ஆனால் இப்போது அந்த அதிகாரி ஒரு சட்ட சிக்கலில் மாட்டிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் சில ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததாக கூறப்படுகிறது. அதனால் அவருடைய கைப்பேசியை சி.ஐ.எஸ்.எஃப் கைப்பற்றியுள்ளது.

இதுதொடர்பாக தகவல் வெளியானதை அடுத்து, நெட்டிசன்கள் பலரும் புகழ்பெற்ற நடிகர்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி என்னவேண்டுமானலும் செய்யலா என்பது நாட்டின் சாபக்கேடு சமூகவலைதளங்களில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
 

From Around the web