தயாரிப்பாளரும் நடிகருமான ‘பட்டியல்’ சேகர் திடீர் மரணம்...

 
1

2006-ம் ஆண்டு வெளியான ‘பட்டியல்’ படத்தை தயாரித்தவர் சேகர். இப்படத்தை தயாரித்ததால் இவர் பட்டியல் சேகர் என அழைக்கப்பட்டு வந்தார். இவர் இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் நடிகர் கிருஷ்ணாவின் தந்தையாவார். ‘பட்டியல்’ படம் தவிர கிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘கழுகு’ மற்றும் ‘அலிபாபா’ படங்களை தயாரித்துள்ளார்.

மேலும் இவர் வீரா நடித்த ‘ராஜதந்திரம்’ படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். பட்டியல் சேகர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் தி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், பட்டியல் சேகர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

RIP

பட்டியல் சேகரின் உடல் அஞ்சலிக்காக கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவரின் திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From Around the web