வெந்து தணிந்தது காடு 2 அப்டேட்...!! இதோ..!!
தமிழ் சினிமாவில் சிம்புக்கு இருந்து வந்த தொடர் தோல்விக்கு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ படம் முற்றுப்புள்ளி வைத்தது. அதையடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அண்மையில் சிம்பு நடிப்பில் வெளியான ‘பத்து தல’ படத்துக்கும் ரசிகர்கள் ஓரளவுக்கு வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து சிம்பு அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிக்கும் படத்திலும், கவுதம் மேனன் இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார்.
அதிலும் கமல்ஹாசன் தயாரிக்கும் சிம்பு படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. கவுதம் மேனன் இயக்கும் படம் வெந்து தணிந்தது காடு 2 என்று கூறப்படுகிறது. இரண்டுக்குமே பொருந்தக்கூடிய கெட்-அப்பை பின்பற்றை சிம்பு முயற்சித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், வெந்து தணிந்தது காடு 2 படத்துக்கான திரைக்கதை தயாராகி வருகிறது. கதை கவுதம் மேனன் சிறப்புடன் எழுதி வருகிறார். படத்துக்கான எழுத்துப் பணிகள் முடிந்ததும் படப்பிடிப்பும் துவங்கிவிடும். இந்த படத்தில் நடிப்பதற்கு சிம்பு மிகவும் ஆர்வமாக உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.