நாங்க சாதாரண படம் எடுக்கலை- ’சூர்யா 42’ குறித்து ஞானவேல்ராஜா..!!

பத்து தல படம் தொடர்பான விளம்பர பணிகளில் ஈடுபட்டிருக்கும் தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல்ராஜா, சூர்யா 42 படம் தொடர்பான அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
 
K.E> Gnanavelraja

தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க படைப்புகளை வழங்கிய நிறுவனங்களில் முக்கியமானது ஸ்டூடியோ க்ரீன். ’சில்லுனு ஒரு காதல்’, ‘பருத்துவீரன்’, ‘சிங்கம்’, ‘மெட்ராஸ்’ போன்ற படங்களை தயாரித்து தென்னிந்தியாவின் முன்னணி நிறுவனமாக உள்ளது. இதனுடைய நிறுவனர் கே.இ. ஞானவேல்ராஜா. இவர் நடிகர் சூர்யாவின் சித்தி மகனாவார்.

ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள ‘பத்து தல’ படம் வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஞானவேல்ராஜா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் சமூக ஊடகங்கள் சிலவற்றுக்கும் ‘பத்து தல’ படம் தொடர்பாக அவர் பேட்டி அளித்து வருகிறார்.

அவ்வாறு ஒரு பேட்டியில் பேசுகையில் ‘சூர்யா 42’ தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவல் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. தென்னிந்திய படங்களுக்கு தேசியளவிலும் உலகளவிலும் சந்தை விரிவடைந்துள்ளதற்கு காரணம் ராஜமவுலி தான். அதற்கு நிச்சயமாக அவருக்கு நன்றி கூற வேண்டும். 

surya 42

சூர்யா 42 படத்துக்கான ஒரு மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு இருந்தது. அப்போது படத்தின் கதை என்ன என்பது ரசிகர்களுக்கு புரிந்துவிட்டது. இதன்மூலம் அது சாதாரண படம் கிடையாது என்பது எனக்கும் புரிந்தது. முன்பு முடிவு செய்யப்பட்டதை விடவும், ‘சூர்யா 42-வின்’ பட்ஜெட் தற்போது 3 மடங்காக அதிகரித்துள்ளது. 

இப்படி ஒரு படம் உருவாக காரணம் ராஜமவுலி தான்.  ஒருவேளை சூர்யா 42 ஹிட்டானால் அதற்கு காரணம் நாங்களாக இருக்கலாம். சூர்யா 42 பட டீசர் தரமாக வந்துள்ளது. அது மே மாதம் வெளியாகும். அப்போது படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி உள்ளிட்டவை அறிவிக்கப்படும் என்று ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.

From Around the web