நடிகர் சிம்பு மீதான தடையை நீக்கியது தயாரிப்பாளர் சங்கம்..!

 
சிம்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கர் நடிகர் சிம்பு மீது போட்டிருந்த ரெட் கார்டை நீக்கியுள்ளது.

நடிகர் சிம்புவால் 4 தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டதை அடுத்து, இந்த விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்றது. அங்கு நடத்தப்பட்ட ஆலோசனையின் படி பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு தீர்வு எட்டும் வரை சிம்பு படங்களுக்கு பெப்சி தொழிலாளர்கள் பணியாற்றக்கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை பெப்சி தொழிலாளர்கள் சம்மேளனம் ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கு போடப்பட்ட ரெட் கார்டை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நீக்கியுள்ளது. மேலும் கவுதம் மேனன் இயக்கத்தில சிம்பு நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்துக்கு பெப்சி தொழிலாளர்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சிம்புவினால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நான்கு தயாரிப்பாளர்களில் ஒருவரான மைக்கேல் ராயப்பன், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த விவகாரத்திற்கான தீர்வு நீதிமன்றத்தில் எட்டப்படவுள்ளதால், தயாரிப்பாளர் சங்கம் சிம்பு மீதான ரெட் கார்டை நீக்கியுள்ளது.
 

From Around the web