தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு..! இனி தயாரிப்பாளர் சங்கத்தை ஆலோசிக்காமல் தனுஷுடன் ஒப்பந்தம் செய்யக்கூடாது..!

 
1

தயாரிப்பாளர் சங்கம், நடிகர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் உள்ளடங்களாக கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக நடிகர் தனுஷை வைத்து படமெடுக்க முன்வருபவர்கள் தயாரிப்பாளர் சங்கத்திடம் கலந்து ஆலோசித்து விட்டு அதற்குப் பிறகு படத்தை உறுதி செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதாவது தனுஷ் நிறைய தயாரிப்பாளர்களிடம் பணத்தை முற்பணமாக வாங்கிவிட்டு படத்தை முடித்துக் கொடுக்கவில்லை என புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, தனுஷ் வேறு ஒரு படம் நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் அதற்கு முன்பு அவரது ஐம்பதாவது படமான ராயன் படத்தை ஆரம்பித்து முடித்து விட்டார். ராயன் படத்திற்கு முன்பு அட்வான்ஸ் வாங்கிய படங்கள் தற்போது வரை நிலுவையில் இருப்பதாக புகார் எழுந்துள்ள நிலையிலேயே, தயாரிப்பாளர் சங்கத்தினால் இந்த முடிவு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இது குறித்து பேசிய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, “நடிகர் தனுஷை வைத்து படம் தயாரிப்பது தொடர்பாக தன்னிச்சையாக தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்து இருப்பது தவறானது. நடிகர் தனுஷ் மீது இதுவரை எந்த புகாரும் நடிகர் சங்கத்திற்கு வரவில்லை” என்றார்.

From Around the web