நல்ல செய்தி சொன்ன ’ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ நிகழ்ச்சிக் குழு..!!
 

உலகளவில் வரவேற்பு பெற்ற ஹவுஸ் ஆஃப் தி டிராகன் வலை தொடரின் இரண்டாவது சீசனுக்கான படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் அறிவித்துள்ளது.
 
house of the dragon

ரயான் காண்டல், ஜார்ஜ் ஆர்.ஆர். மார்டின் எழுத்தி உருவான ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ வலை தொடர் உலகளவில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனுடைய முந்தைய காலக்கட்டத்தை வைத்து உருவாக்கப்பட்ட தொடர் தான் ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’. கடந்தாண்டு ஆகஸ்டு 21-ம் தேதி வார இறுதி நாட்களில் இந்த தொடர் ஒவ்வொரு எபிசோடுகளாக வெளியானது.

மொத்தம் 10 எபிசோடுகள் கொண்ட இந்த தொடர் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரை விடவும் பெரும் வரவேற்பு பெற்றது. குறிப்பாக முதல் சீசனின் இறுதி அத்தியாயம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நிறைவுற்றது. இதனால் இப்போதே ஹவுஸ் ஆஃப் தி டிராகன் சீசன் 2 சீரிஸை ரசிகர்கள் பெரிய ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

null


இந்நிலையில் தொடரை தயாரித்து வரும் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன் - சீசன் 2’ தொடருக்கான படப்பிடிப்பு துவங்கிவிட்டதாக அறிவித்துள்ளது. இந்த குறிப்பிட்ட சீசன், முதல் சீசனை விடவும் பெரும் பொருட்செலவில் தயாராகவுள்ளது. எனினும் இதனுடைய ஒளிப்பரப்பு 2 ஆண்டுகளுக்கு பிறகு தான் துவங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


முன்னதாக ஹெச்.பி.ஓ நிறுவனம் கேம் ஆஃப் த்ரோன்ஸ் நாவலின் மற்றொரு முன்கதையை வலைதொடராக தயாரிக்கிறது. ஆர்.ஆர். மார்டின் எழுதிய ‘டங்க் மற்றும் எக்’ என்கிற புத்தகத்தை மையப்படுத்தி இப்புதிய வலைதொடர் தயாராகிறது. இதற்கு "A Knight of the seven kingdoms: The hedge Knight" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனுடைய படப்பிடிப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
 

From Around the web