சிவராத்திரியில் வெளியான ‘ப்ராஜெக்ட் கே’ ரிலீஸ் தேதி..!!

 
1

‘பாகுபலி’ படத்திற்கு பான் இந்தியா ஸ்டாராக மாறிய பிரபாஸ்-க்கு, கடைசியாக ‘சாஹோ’, ‘ராதே ஷ்யாம்’ ஆகிய படங்கள் சரியாக கைகொடுக்கவில்லை. அதனால் அந்த படங்களின் மீது மிகவும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஆதி புருஷ், சலார், ப்ரா ஜெக்ட் கே ஆகிய படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. 

project k

ஏற்கனவே ஆதிபுருஷ், சலார் ஆகிய இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ‘பிராஜெக்ட் கே’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான போஸ்டரில் ஒரு பெரிய கை ஒன்று இருக்க, அதை நோக்கி வீரர்கள் துப்பாக்கியுடன் செல்கின்றனர். 

project k

சூப்பர் ஹீரோ படமாக உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸுடன் இணைந்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி என இப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

From Around the web