பிரபாஸ் - தீபிகா படுகோன் - அமிதாப் பச்சன் நடிக்கும் ‘ப்ராஜெக்ட்- கே’..!

 
பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன்

பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் அமிதா பச்சன் இணைந்து நடிக்கவுள்ள புதிய படத்தின் பட்ஜெட் உள்ளிட்ட விபரங்கள் வெளியாகியுள்ளன.

நடிகையர் திலகர் படத்தை இயக்கி தேசிய விருது வென்றவர் நாக் அஸ்வின். இவர் அடுத்ததாக ரூ. 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

மேலும் கதாநாயகியாக தீபிகா படுகோன் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போது படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அமிதாப் பச்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரபாஸ் தற்போது ராதே ஷ்யாம், சலார் படங்களில் நடித்து வருகிறார். அனிமேஷ் படமான அதிபுருஷ் படத்தில் நடித்து முடித்துவிட்டார். விரைவில் சலார், ராதே ஷ்யாம் படங்களும் முடிவடையவுள்ளன. அதை தொடர்ந்து இப்படம் தயாராகிறது.

தற்போதைக்கு படத்துக்கு ‘புராஜெக்ட் கே’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பிரபாஸ் நடிக்கும் 21-வது படம் என்பதால் பிரபாஸ் 21 என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த படத்திற்கான ஷூட்டிங் பணிகள் நவம்பர் மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

From Around the web