உலகப்புகழ் பெற்ற காமிக்கான் நிகழ்ச்சியில் வெளியாகும் Project K  அப்ட்டேஸ்..!!

பிரபாஸ், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் புராஜக்ட் கே படம் தொடர்பான முக்கிய அப்டேட்டுகள் அனைத்தும் அமெரிக்காவில் நடைபெறும் காமிக்கான் மாநாட்டில் அறிவிக்கப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 
 
 
project k

நடிகையர் திலகம் படம் மூலம் கவனமீர்த்த இயக்குநர் நாக் அஸ்வின் அடுத்து இயக்கி வரும் படம் புராஜக்ட் கே. இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாகவும், தீபிகா படுகோன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

இவர்களுடன் கமல்ஹாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். புராஜக்ட் கே படத்தில் அவர் தான் வில்லன் என்றும் தகவல்கள் சொல்லப்படுகின்றன. இதற்காக அவருக்கு ரூ. 20 கோடி ஊதியம் பேசப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது ஹைதாபாத்திரத்தில் இந்த படத்துக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. முற்றிலும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கொண்ட படமாக தயாராகி வரும் புராஜக்ட் கே வரும் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் டைட்டின், டீசர், ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்பை பிரமாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. இம்மாதம் 20-ம் தேதி அமெரிக்காவில் நடைபெறும் காமிக்கான் சர்வதேச மாநாட்டில் படத்தின் ஒட்டுமொத்த அப்டேட்டும் வெளியிடப்படுகிறது. 

இதன்மூலம் காமிக்கான் மேடையில் முதல்முறையாக அறிவிக்கப்படும் இந்தியப் படம் என்று பெருமை ‘புராஜக்ட் கே’ படத்துக்கு கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


 

From Around the web