ப்ரோமோவுக்கே ப்ரோமோவா..?? அதகளப்படுத்தும் ஜெயிலர் படக்குழு..!!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் சிங்கிள் பாடலுக்கான ப்ரோமோவை வெளியிடுவது குறித்த ப்ரோமோவை படக்குழு சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
 
jailer

தமிழில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ரஜினிகாந்த், பெரும் நம்பிக்கையுடன் நடித்து வரும் படம் ஜெயிலர். இந்த படத்தில் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா,  ஜாக்கி ஷெராஃப், சிவராஜ்குமார், சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, கிஷோர், அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்கிற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். நெல்சனுக்கே உரித்தான காமெடியுடன் அதிரடி த்ரில்லர் கதையமைப்பில் படம் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இந்நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிள் பாடலை விரைந்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கான ப்ரோமோ விரைவில் வெளிவரவுள்ள நிலையில், அதற்கு ஒரு ப்ரோமோவை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ்.

அதில் அனிருத் மற்றும் அவருடைய பணியாளர் இருவரும், இயக்குநர் நெல்சனை கலாய்ப்பது போன்ற காட்சிகள் உள்ளது. இதன்மூலம் ஜெயிலர் படத்துக்கான முதல் சிங்கிள் ப்ரோமோ மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அனிருத்தின் இந்த ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள், அதை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


 

From Around the web