மாஸ்டர் செஃப் தொகுப்பாளராக இருப்பதில் பெருமை: விஜய் சேதுபதி..!

 
விஜய் சேதுபதி மற்றும் தமன்னா

தமிழில் தயாராகி வரும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

சர்வதேசளவில் கொண்டாடப்பட்டு வரும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக உள்ளது மாஸ்டர் செஃப். பல்வேறு மொழிகளில், பல நாடுகளில் இந்நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியிலும் இந்நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டு பல்வேறு சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்நிலையில் முதன்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மாஸ்டர் செஃப் தயாராகிறது. தமிழில் இந்நிகழ்ச்சியை விஜய் சேதுபதியை தொகுத்து வழங்குகிறார். தெலுங்கில் நடிகை தமன்னா தொகுத்து வழங்குகிறார்.

தமிழில் இந்நிகழ்ச்சி வரும் ஆகஸ்டு 1-ம் தேதி முதல் ஒளிப்பரப்பாகவுள்ளது. முதல் சீசனில் வீட்டு சமையலை மையப்படுத்தி தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் 20 பேர் போட்டியிடுகின்றனர். தொடர்ந்து மூன்று மாதங்கள் முதல் சீசன் ஒளிப்பரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சிக்காக நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஜய் சேதுபதி, சினிமாவில் நடிப்பதைவிட ‘மாஸ்டர் செஃப்’ தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மிக பிரமாண்டமாக உருவாகும் இந்நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சிகளுக்கு ஒரு புதிய அளவுகோலை அமைக்கும் என்று நான் நம்புகிறேன்

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்காக பலதரப்பினர் மிகுந்த கடினமாக  உழைத்து வருகின்றனர். போட்டியாளர்கள் மிகுந்த கடினமான டாஸ்குகளை மேற்கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அதனுடைய பலன் நிச்சயமாக வெளியே தெரியும் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
 

From Around the web