நிரூபணமான குற்றம்..! ஈஸ்வரியின் காலை வாரிய கோபி..! 

 
1

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்காக ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

ஏற்கனவே கமலா கொடுத்த கம்பிளைண்டில் ஈஸ்வரியை போலீசார் அரெஸ்ட் பண்ணிக் கொண்டு செல்கின்றார்கள்.

தற்போது வெளியான ப்ரோமோவில், நீதிமன்றத்தின் கூண்டில் ஈஸ்வரி நின்று தான் எந்த தப்பும் செய்யவில்லை. நான் ராதிகாவை தள்ளியும் விடல கொலை முயற்சியும் பண்ணல என வக்கீலிடம் சொல்லுகிறார்.

அதன் பின்பு ராதிகாவிடம் விசாரித்த வக்கீல், இவங்க தான் உங்கள உறுதியாக தள்ளி விட்டார்களா என கேட்க, ஆமாம் இவங்க தான் என்னை தள்ளி விட்டாங்க என ராதிகாவும் ஸ்ட்ராங்காக சொல்லுகிறார்.

அதன் பின்பு கோபியிடம் உங்க அம்மா குழந்தையை கலைக்க சொல்லி பலமுறை சொன்னாங்களா? எனக் கேட்க, அவரும் ஆமாம் என்கின்றார்.

இதனால் குற்றம் நிரூபணம் ஆகி ஈஸ்வரியை நீதிமன்ற தடுப்பு காவலில் வைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது. இதனால் கதறி அழுத ஈஸ்வரி பாக்யாவிடம் காலம் முழுக்க இங்க தான் இருக்கணுமா என அவரை கட்டிப்பிடித்து அழுகிறார்.

இது தான் தற்போது வெளியான ப்ரோமோ. இனி பாக்கியா ஈஸ்வரியை மீட்பாரா? இல்லை கம்பி எண்ண விடுவாரா என பொறுத்து இருந்து பார்ப்போம். 

From Around the web