மண்டியிட்ட கார்த்தி; வாள் வீசும் த்ரிஷா- பொன்னியின் செல்வன் 2 அசத்தல் அப்டேட்..!!

ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் குறித்து அசத்தலான அப்டேட் வெளியாகியுள்ளது. 
 
ponniyin selvan

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் சிங்கிள் பாட்டு விரைவில் ரிலீஸாகும் என்று ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்ட நிலையில், தற்போது பாடல் வெளியீட்டு தேதி மற்றும் நேரத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் 70 ஆண்டு கால கனவாக இருந்த ’பொன்னியின் செல்வன்’ நாவலை மணிரத்னம் திரைப்படமாக்கினார். கடந்தாண்டு வெளியான இந்த படத்தின் முதல் பாகம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகமிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதன்படி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 23-ம் தேதி வெளிவரவுள்ளது. அதற்கு முன்னதாக வரும் 29-ம் தேதி படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக பி.எஸ்-2 படத்தின் முதல் சிங்கிள் வெளிவரும் என தயாரிப்பு நிறுவனம் கூறி இருந்தது.


இந்நிலையில் அந்த பாடலின் பெயரும், பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் தேதியையும் படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி அந்த பாடலுக்கு ‘அகநக’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் கண்ணை கட்டி, மண்டியிட்டு, கைகள் கட்டப்பட்டு கார்த்திக் அமர்ந்துள்ளார்.

அவருக்கு எதிரே நடிகை த்ரிஷா கையில் வாளுடன் கம்பீரமாக நிற்கிறார். இந்த போஸ்டர் பலரையும் கவர்ந்துள்ளது. அதன்படி பி.எஸ்- 2 படத்தின் ‘அகநக’ பாடல் வரும் 20-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளிவரவுள்ளது. 

From Around the web