புனித் ராஜ்குமார் மனைவியின் உருக்கமான பதிவு..!!

 
1

நடிகர் புனித் ராஜ்குமார் (46) கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். பெரும் ரசிகர்கள் பட்டாளம் கொண்ட புனித் ராஜ்குமார் மறைவு கன்னட திரையுலகம் மட்டுமல்லாமல், தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறையினரும் காண்டிவரா மைதானத்தில் அஞ்சலி செலுத்தினர். 

கர்நாடகாவின் முன்னணி நடிகரான அவரது நினைவிடம் அமைந்துள்ள காண்டிவரா மைதானத்தில் தொடர்ச்சியாக இப்போதும்கூட ரசிகர்களும் திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

சினிமாவில் நடித்து விட்டோம் சம்பாதித்து விட்டோம் என்று இல்லாமல் சத்தமில்லாமல் அவர் செய்த உதவி அவர் மறைவுக்குப் பின்பு தான் வெளியே வந்தது. 1800 மாணவ மாணவிகளை படிக்க வைத்தது மட்டுமல்லாமல் முதியோர் இல்லங்கள், கோசாலை என்று சத்தமில்லாமல் பல உதவிகளை செய்துவந்துள்ளார் அதுமட்டுமல்லாமல் தனது ரசிகர்களின் குடும்பத்திற்கு மறைமுகமாக பல உதவிகளைச் செய்து வந்திருக்கிறார். இறந்த பின்னும் அவர் செய்த கண் தானத்தால் 4 இளைஞர்கள் பார்வை பெற்றனர். 

இந்நிலையில், புனித் அவர்களது மனைவி அஸ்வினி புனித் ராஜ்குமார் முதன் முறையாக கணவர் மறைவிற்கு பின் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியூட்டும் அன்பும் பாசமும் கொண்டு எனது கணவரை பவர் ஸ்டார் ஆக மாற்றிய திரு புனித் ராஜ்குமாரின் அகால மரணத்தை நினைத்துப் பார்க்க முடியாது ஆயினும் கூட அத்தகைய நேரத்தில் நீங்கள் அவருக்கு மிகவும் மரியாதையுடன் பிரியாவிடை அளித்துள்ளீர்கள்.

திரையுலக பிரியர்கள் மட்டுமின்றி வயது வரம்பு மீறி நாடு முழுவதும் இருந்து வரும் லட்சக்கணக்கான இரங்கலை பார்த்து மனம் கனக்கிறது. அவர்களின் நினைவுகள் இன்னும் உயிருடன் உள்ளது.

உலகெங்கிலும் உள்ள எங்களுக்கு ஆதரவாக நின்று ஆதரவளித்த சக ரசிககடவுள்கள் மற்றும் பொதுமக்களுக்கு முழு குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

From Around the web