புறநானூறு அப்டேட்..! இந்த படத்தில் வில்லனே ஒரு ஹீரோ தான்..!
Nov 21, 2024, 06:35 IST
சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதனையடுத்து சுதா கொங்கரா இயக்கத்திலும் 'புறநானூறு' என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ஏற்கனவே சூர்யா நடிப்பதாக இருந்தநிலையில் திடீரென விலகிவிட்டார். அதனை அடுத்தே சிவா இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
இப்படத்தின் அப்டேட் வந்தநிலையில் தற்போது ஜெயம் ரவி வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை வலைப்பேச்சு அந்தணன் பகிர்ந்துள்ளார். சமீப காலமாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரியளவில் ரசிகர்களை கவரவில்லை. இப்படியான சூழ்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயரம் ரவி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து உண்மை தகவல் இன்னும் வெளியாக வில்லை.