புஷ்கர்  - காயத்ரியுடன் கைக்கோர்க்கும் எஸ். ஜே. சூர்யா: எதற்கு தெரியுமா..?

 
ஆண்ட்ரூ லூயிஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா

பிரபல இயக்குநர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிக்கும் வலை தொடரில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ள விபரம் தெரியவந்துள்ளது.

தமிழின் முக்கிய நடிகராக மாறியுள்ள எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் மாநாடு, டான், பொம்மை, கடமையை செய், இறவாக்காலம் போன்ற படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. விரைவில் ஒவ்வொன்றாக வெளியிட தயாராகி வருகின்றன.

இதற்கிடையில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் புதிய வலை தொடர் ஒன்று தயாராகவுள்ளது. இந்த வெப் தொடரை கொலைகாரன் படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மிகுந்த பொருட்செலவில் தயாராகும் இந்த தொடரை புஷ்கர் - காயத்ரி தயாரிக்கவுள்ளார். சமீபத்தில் இவர்கள் தயாரித்த ‘ஏலே’ திரைப்படம் சன் டிவியில் நேரடியாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

From Around the web