புஷ்பா 2 படத்துக்காக தங்க நிறத்தில் ஜொலிக்கும் அல்லு அர்ஜுன்...!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தில் அவருடைய கெட்-அப் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியான நிலையில், அந்த படத்துக்கான அவருடைய மற்ற கெட்-அப் இப்போது தெரியவந்துள்ளது.
 
allu arjun

தெலுங்கில் தயாரான ’புஷ்பா ;தி ரூல்’ திரைப்படம் 2021-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. மற்ற மொழிகளிலும் இந்த படத்துக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்தது.

குறிப்பாக இப்படத்தின் பாடல்கள் அனைத்தும், எல்லா மொழிகளிலும் பிரபலமானது. வெவ்வேறு மொழிகளில் கூட புஷ்பா படத்தின் தெலுங்குப் பதிப்பு பாடல்கள் சக்க போடு போட்டன. சமூகவலைதளங்களில் இன்னும் புஷ்பா படத்தின் பாடல்கள் டிரெண்டிங்கில் உள்ளன.

allu arjun

தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு பணிகள் துவங்கியுள்ளன. தற்போது தெலங்கானா பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், விரைவில் பெங்களூரு செலல்வுள்ளது. இந்த படப்பிடிப்பில் நடிகை சாய் பல்லவியும் இணைந்து கொள்வார் என்று தெரிகிறது.

sai pallavi

ஏற்கனவே புஷ்பா 2 படத்துக்கான நடிகர் அல்லு அர்ஜுனின் லுக் வெளியாகிவிட்டது. இப்போது அதே படத்துக்கான அவருடைய மற்றொரு லுக் வெளியிடப்பட்டுள்ளது. தங்க நிறத்தில் ஜொலிக்கும் அவருடைய கலர் செய்த முடி, சமூகவலைதளங்களில் கவனமீர்த்துள்ளது.
 

From Around the web