புஷ்பா 2 சாதனை : வங்க மொழியில் வெளியாகும் முதல் தெலுங்கு படம்..!

 
1

கடந்த வருடம் டிசம்பர் 13ஆம் தேதி வெளிவந்த புஷ்பா படத்தின் முதல் பாகமான ‘புஷ்பா தி ரைஸ்’ தென்னிந்தியா மட்டும் இல்லாமல் பான் இந்தியா அளவில் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்த இத்திரைப்படம் பான் இந்தியா அளவில் வெளியாகி ரூபாய் 500 கோடி வரை வசூலித்து சாதனை செய்தது. தற்போது அல்லு அர்ஜூன் நடிப்பில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா தி ரூல்‘ உருவாகி வருகிறது. இப்படத்திலும் ராஷ்மிகா நாயகியாக நடிக்கிறார்.

இதைத் தொடர்ந்து, இந்தியாவின் பவர்ஹவுஸ் தயாரிப்பாளர் பூஷன் குமார், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் இந்திய சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஆகியோர் ஒரு மிகப்பெரிய படத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர். டி-சீரிஸ் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புஷ்பா இரண்டாம் பாகம் தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இது தவிர வங்க மொழியிலும் இத்திரைப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, வங்க மொழியில் வெளியாகும் முதல்  தெலுங்கு திரைப்படம் புஷ்பா 2 திரைப்படமாகும்.

From Around the web