புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..! 

 
1

தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன் . இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘புஷ்பா: தி ரைஸ்’.

சுகுமார் இயக்கத்தில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது .

இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அமோக வரவேற்பால் தற்போது புஷ்பா பார்ட் 2 விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இந்த படத்திலும் ஏரளமான முன்னணி நட்சத்திரங்கள் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றனர்.இந்நிலையில் இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் கிடைத்துள்ளது.

அதன்படி அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என படக்குழு மிரட்டலான போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


 


 

From Around the web