புஷ்பா 2 ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்…!! ஆனா அதில ஒரு நல்ல செய்தி இருக்கு.!

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான சூப்பர்ஹிட் திரைப்படமே ‘புஷ்பா: தி ரைஸ்’.
சுகுமார் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது .
இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அமோக வரவேற்பால் தற்போது புஷ்பா பார்ட் 2 விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.
இந்த படத்திலும் ஏரளமான முன்னணி நட்சத்திரங்கள் ஒப்பந்தமாகி நடித்துள்ள நிலையில் இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதமே திரையரங்குகளில் வெளியாக இருந்தது ஆனால் படத்தின் வேலைகள் சரிவர முடியாததால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது அதன்படி அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா 2’ திரைப்படம், டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளதாக புதிய போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.