புஷ்பா 2 மொத்த கலெக்சன் ரிப்போரட் இதோ..!

 
1

புஷ்பா படத்தின் முதலாவது பாகத்தில் அல்லு அர்ஜுன் லாரி ஓட்டுனராக காணப்பட்டதோடு சட்ட விரோதமாக செம்மரம்  கடத்தும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் தன்னை வல்லமை மிக்க நபராகவும் மாற்றிக் கொண்டார். அவர் சட்ட விரோதமான செயல்களை செய்தாலும் அம்மா மீதும் தனது காதலி மீதும் அதிக அளவு அன்பை வைத்திருந்தார். இவ்வாறு இந்த கதை விறுவிறுப்பாக சென்றது.

இதன் தொடர்ச்சியாகவே இரண்டாம் பாகம் அமைந்துள்ளது. முதலாம் பாகத்தில் போலீஸ் அதிகாரியாக பகத் பாஸில் நடித்துள்ளார். தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுனை பகத் பாஸில் முறை அடித்தாரா? இல்லையா? என்பதே மையக் கதையாக காணப்படுகின்றது.

புஷ்பா 2 படம் வெளியான முதல் நாளிலேயே 294 கோடிகளை வசூலித்து மிகப்பெரிய சாதனையை படைத்திருந்தது. அடுத்தடுத்த நாட்களில் இதன் கலெக்ஷன் அதிகரித்துக் கொண்டே சென்றது. 

இந்த நிலையில், புஷ்பா 2 திரைப்படம் 4 நாட்களில் சுமார் 800 கோடி வசூலை குவித்துள்ளது. இனிவரும் நாட்களுக்குள் ஆயிரம் கோடி ரூபாயை கடந்து விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே இந்த திரைப்படம் ஃப்ரீ புக்கிங்கில் ஆயிரம் கோடிகளை வசூலித்த நிலையில், தற்போது இன்னும் ஒரு சில நாட்களிலேயே 1000 கோடிகளைத் தாண்டி வசூலை வாரிக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

From Around the web