அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னதாக வெளியாகும் புஷ்பா தி ரைஸ்- பார்ட் 01..!

 
புஷ்பா

அல்லு அர்ஜுன், ஃபகத் பாசி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா முதலாம் பாகம் படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் பிரமாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் இந்த படத்தில் லாரி ஓட்டுநராக நடிக்கிறார். திருப்பதிக்கு அருகே நடைபெறும் செம்மரக் கடத்தல் சம்பவங்களை தொகுத்து இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இப்படம் மூலம் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ஃபகத் பாசில் தெலுங்கில் அறிமுகமாகிறார். படத்தில் கதாநாயகியாக  ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். வரலாற்று கால பின்னணியில் இந்த படத்துக்கான கதை உருவாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த படம் டிசம்பர் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த தேதியை மாற்றியுள்ளது படக்குழு. அதன்படி அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பாக வரும் டிசம்பர் 17-ம் தேதி புஷ்பா முதல் பாகம் வெளிவருகிறது.

அதன்படி வரும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில்  இப்படம் வெளிவருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. 

From Around the web