கண்டுகொள்ளாத தனுஷ்; கவின் பக்கம் திரும்பிய பிரபல இயக்குநர்..!!
தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. இதனால் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் வெற்றி அடையும் முனைப்புடன் தனுஷ் நடித்து வருகிறார்.
இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் படம், வெற்றிமாறன் இயக்கும் படம் என தன்னுடைய கால்ஷீட்டை ஓராண்டுக்கு நிரப்பி வைத்துள்ளார். மேலும் சன் பிக்சர்ஸுக்காக ஒரு படத்தை வேறு அவர் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளன் உடன் சேர்ந்து தனுஷ் படம் பண்ணுவதாக இருந்தது. அதற்குரிய கதை எல்லாம் கேட்கப்பட்டு, ஷூட்டிங்கும் முடிவு செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் நடிகர் தனுஷுக்கு இரண்டாவது முறையாக தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து வந்த திருச்சிற்றம்பலம் படம் அவருடைய கேரியர் கிராஃபை மேலே கொண்டு சென்றுவிட்டது. இதன்காரணமாக இளன் படத்தை தனுஷ் டீலில் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அதனால் மனமுடைந்த இளம், அந்த கதையில் கவினை நடிக்கவைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.