உலகப் புகழ்பெற்ற இயக்குநரின் கடைசிப் படம் இதுதான்..!!

 
Quentin Tarantino

உலகளவில் இருக்கும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குநர்களில் ஒருவரான குவென்டின் டரான்டினோ அடுத்ததாக இயக்கவுள்ள படத்துடன், சினிமாவில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், நான் லீனியர் திரைக்கதை அம்சம், சட்டயர் மற்றும் டார்க் காமெடி வகை சினிமாக்களை உலகளவில் டிரெண்டிங் செய்த முக்கிய இயக்குநர்களில் ஒருவர் குவென்டின் டரான்டினோ. அதன்காரணமாகவே இவர் உலகளவில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை சென்றடைந்தார்.

இவருடைய இயக்கத்தில் வெளியான பல்ப் பிக்‌ஷன், கில் பில் 1 மற்றும் 2, கிரிண்ட் ஹவுஸ்: டெத் ஃப்ரூப், டிஜாங்கோ அன்செயிண்டு, ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் போன்ற படங்கள் உலகளவில் புகழ்பெற்றவையாகும். 

இந்நிலையில் 1970-களில் அமெரிக்காவில் வாழ்ந்த பாலின் கேல் என்கிற திரைபப்ட விமர்சகர் மற்றும் எழுத்தாளரை மையப்படுத்திய புதிய படம் இயக்கவுள்ளார். இந்த படத்துக்கு ‘தி மூவி க்ரிட்டிக்’ என்று பெயரிட்டுள்ளார். முன்னதாக குவென்டின் டரான்டினோ தனது வாழ்நாளில் வெறும் 10 படங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

மேலும், தனது 60 வயதில் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவேன் என்றும் கூறியிருந்தார். வரும் 27-ம் தேதி அவருக்கு 60 வயது பூர்த்தி அடைகிறது. அவர் இயக்கும் தி மூவி க்ரிக்டிக் குவென்டின் டரான்டினோவின் பத்தாவது படமாகும். அதனால் இது அவருடைய கடைசிப் படம் என்கிற பேச்சு பரவலாக ஹாலிவுட்டில் எழுந்துள்ளது.

எனினும், இதுதொடர்பாக குவென்டின் டரான்டினோ தரப்பில் இருந்து எந்தவிதமான அறிவிப்பும் தகவலும் வெளிவரவில்லை. இருந்தாலும் தி மூவி க்ரிக்டிக் அவருடைய கடைசிப் படம் என்று ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

From Around the web