புதியதாக திருமணமான நடிகையிடம் விவகாரத்து குறித்து கேள்வி..!

தற்போதே திருமணமான பிரபல நடிகையிடம் விவகாரத்து குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘நீதானே என் பொன்வசந்தம்’ படம் மூலம் குணச்சித்திர நடிகையாக அறிமுகமானவர் வித்யூலேகா ராமன். பிரபல சீரியல் நடிகர் மோகன் வி. ராமனின் மகள் ஆவார்.
இந்த படத்துக்கு பிறகு தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு, ரன் ராஜா ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். எனினும் இவரை கொண்டாடியது தெலுங்கு திரையுலகம் தான். ஆந்திரா மற்றும் தெலங்கனாவில் கோவை சரளாவுக்கு பிறகு பலராலும் கொண்டாடப்பட்ட காமெடி நடிகை என்றால் அது வித்யூலேகா தான்.
கடந்தாண்டு சஞ்சய் என்பவருடன் இவருக்கு திருமண நிச்சயம் நடந்தது. அதை தொடர்ந்து சமீபத்தில் அவர்கள் இருவருக்கும் தமிழ் மற்றும் சிந்தி முறைப்படி திருமண வைபவம் விமர்சையாக நடந்து முடிந்தது. தற்போது தேனிலவுக்காக தம்பதிகள் மாலத்தீவுக்கு சென்றுள்ளனர்.
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றை நடிகை வித்யூலேகா தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த சமூகவலைதளவாசி ஒருவர் இப்படியெல்லாம் உடை அணிந்தால் உடனே விவாகரத்து தான், எப்போது உங்களுக்கு விவகாரத்து நடக்கும் என்று கேட்டு பதிவிட்டுள்ளார்.
அதனால் அதிர்ச்சி அடைந்தாலும், ரசிகர் கமெண்டுக்கு வித்யூலேகா பதிலடி கொடுத்துள்ளார். என்னுடைய கணவர் அன்பானவர், பண்பு தெரிந்தவர். அவர் போன்ற ஒருவர் வாழ்க்கை துணையாக அமைந்தது எனது நல்வாய்ப்பு. வெறுப்பான எண்ணம் கொண்டவர்களின் மனநிலையை நான் மாற்ற முடியாது. இப்படி தான் பெண்கள் மீது நீங்கள் மரியாதை வைத்துள்ளீர்கள் என்று நினைக்கும் போது அருவருப்பாக உள்ளது என அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.