பகிரங்க மன்னிப்பு கேட்ட புகழ் , குரேஷி..!!

 
1

விஜய் டிவி பிரபலங்களான புகழ் மற்றும் குரேஷி இருவரும் துபாயில் நடைபெற்ற மேடை நிகழ்ச்சி ஒன்றில் கமல் மற்றும் மாயா இருவரையும் இணைத்து சர்ச்சைக்குரிய வகையில் ட்ரோல் செய்துள்ளனர்.

அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் மளமளவென பரவ தற்போது செம . வைரல் ஆகி வருகிறது இதில் குரேஷி கமல் போல் மிமிக்கிரி செய்ய, புகழ் ஒவ்வொரு கேள்வியாக அவரிடம் கேட்கிறார்.

அப்போது உங்களுக்கு சென்னையில் பிடித்த இடம் என்ன என்று கேட்டால் மாயாஜால் என கூறுகிறார். பிடித்த படம் மாயாபஜார், தமிழ்நாட்டில் பிடித்த இடம் மாயவரம் என கூற. கமலுடன் மாயாவை மோசமாக ட்ரோல் செய்யும் வகையில் புகழ் குரேஷி பேசியுள்ளனர் .

இதனை கண்ட கமல் மற்றும் மாயாவின் ரசிகர்கள் புகழையும் குரேஷியையும் கண்டபடி திட்டி கமெண்டில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்த இருவருக்கும் கண்டனங்கள் வலுக்கும் நிலையில் இருவரும் தனி தனியாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பகிரங்க மன்னிப்பை கேட்டுள்ளனர்.

இதில் புகழ் மன்னிப்பு கேட்டுள்ள விடியோவை பார்க்கும்போது அவர் மரண பயத்தில் கலங்கியபடி மன்னிப்பு கேட்கிறார்.

இதோ அந்த விடியோவை நீங்களும் பாருங்க…


 

From Around the web