விவகாரத்து பெறுவதற்கு மும்முரம் காட்டும் தினேஷ்- ரக்‌ஷிதா ஜோடி.!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை அடுத்து ரச்ஷிதாவை பலரும், தினேஷுடன் மீண்டும் சேர்ந்து வாழ அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதற்கு ரக்‌ஷிதா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த தினேஷ் விவகாரத்து பெறுவதில் ரக்‌ஷிதாவை விட மும்முரமாகியுள்ளதாக கூறப்படுகிறது
 
rachitha

தொலைக்காட்சி பிரபலங்களான ரக்‌ஷிதாவும் தினேஷும் விவகாரத்து செய்யவுள்ளனர் என்கிற செய்தி புதிது இல்லை தான். எனினும், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் சேர்ந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு வாய்ப்பே கிடையாது என்று சின்னத்திரை வட்டாரங்கள் கூறுகின்றன.

ஏற்கனவே பல்வேறு சீரியல்களில் ரக்‌ஷிதா நடித்திருந்தாலும், அவருக்கு பெயர் வாங்கி தந்தது சரவணன் மீனாட்சி தான். பல தமிழ் குடும்பங்களில் அவரை மீனாட்சியாகவே கொண்டாடினர். அந்த நேரத்தில் பிரிவோம் சந்திப்போம் உடன் நடித்து வந்த கதாநாயகன் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

சில ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள், இப்போது விவகாரத்து முடிவை எடுத்துள்ளனர். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதில் மிகவும் முக்கியமானது, தினேஷுக்கு சீரியல் வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஒருபக்கம் தினேஷ் திரைவாழ்க்கை சரிவை சந்தித்து வரும்போது, ரக்‌ஷிதாவுக்கான வாய்ப்பு தொடர்ந்து அதிகமானது. 

இதற்கிடையில் தம்பதிக்கு பல ஆண்டுகள் குழந்தை பேறும் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் பிரச்னைகள் அதிகரித்து, பிரிவு ஏற்பட காரணம் உருவானது. தினேஷை விட்டு பிரிந்து ரக்‌ஷிதா தனியாக வசிக்க தொடங்கினார். அப்போது விவகாரத்து பெறுவதற்கான காரணம் உறுதியானது.

ஆனால் இருவரும் பிரிந்து தான் இருந்தார்களே தவிர, எந்தவிதமான சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. அப்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார் ரக்‌ஷிதா. இது தினேஷின் எதிர்பார்ப்பை பொய்யாக்கியது.

பிக்பாஸில் இருந்தபோது, தினேஷ் ரக்‌ஷிதாவுக்கு ஆதரவு கூட தெரிவித்திருந்தார். அந்நிகழ்ச்சியில் சக போட்டியாளரான ராபர்ட் ரக்‌ஷிதாவை சுற்றி சுற்றி வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தினேஷ், போட்டியாளர் ராபர்ட்டுக்கு ரெட் கார்டு வழங்குமாறு வலியுறுத்தினார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரக்‌ஷிதா திரும்பியது, தினேஷை சந்தித்து ஒன்று சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் ரக்‌ஷிதா தினேஷை விவகாரத்து செய்வதில் உறுதியாக இருக்கிறாராம். அதனால் இருவரும் விவகாரத்தை பெறுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போது, பலரும் அவரை தினேஷுடன் சேர்ந்து வாழ அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் ரக்‌ஷிதா அதை காதில் கூட போட்டுக்கொள்ளவில்லையாம். இதனால் காத்திருந்தது போதும் என ரக்‌ஷிதாவைக் காட்டிலும், தினேஷ் விவகாரத்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
 

From Around the web