ராதா மகள் கார்த்திகா எடுத்த திடீர் முடிவு..!

 
ராதா மற்றும் கார்த்திகா

திரைப்படங்களில் வாய்ப்புகள் இல்லாததால் நடிகை கார்த்திகா நாயர் திரைத்துறையை விட்டு விலகிவிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் 80-களின் மத்தியில் திரைத்துறைக்குள் நுழைந்து முன்னணி இடத்துக்கு உயர்ந்தவர் ராதா. பிறகு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட திரைத்துறையை விட்டு ஒதுங்கிவிட்டார்.

அவருடைய மூத்த மகள் கார்த்திகா ஜீவா நடிப்பில் வெளியான ‘கோ’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து தெலுங்கு, மலையாள மொழிப் படங்களிலும் நடித்தார்.

ஆனால் அவருக்கான பட வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை. எனினும் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். இதற்கிடையில் இந்தியில் சில சீரியல்களிலும் அவர் நடித்தார்.

எனினும் அவருக்கு திரைத்துறையில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் முற்றிலும் சினிமாவில் இருந்து அவர் வெளியேற முடிவு செய்துவிட்டதாக தெரியவந்துள்ளது. தன்னுடைய தந்தை நடத்தி வரும் நட்சத்திர ஹோட்டல் நிர்வாகங்களை கவனித்துக் கொள்ள அவர்  இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

From Around the web