ராதே ஷ்யாம் டிஜிட்டல் உரிமையை போட்டிப் போட்டு கைப்பற்றிய பெரு நிறுவனங்கள்..!

 
ராதே ஷ்யாம்

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை இரண்டு பெரு நிறுவனங்கள் பல கோடி கொடுத்து வாங்கியுள்ளன.

பிரமாண்ட பொருட்செலவி உருவாகி வரும் ராதே ஷ்யாம், 1970-களில் ஐரோப்பாவில் நடக்கும் காதல் படமாக தயாராகி வருகிறது. பிரபாஸ், பூஜா ஹெக்டே முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ராதாகிருஷ்ண மூர்த்தி இயக்கி வரும் இந்த படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை வாங்கியிருக்கும் நிறுவனங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி ராதே ஷ்யாம் படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதர மொழி ஓடிடி உரிமைகள் மற்றும் ஒட்டுமொத்த தொலைக்காட்சி ஒளிப்பரப்பு உரிமையை ஜீ நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

From Around the web