ராதே ஷ்யாம் படத்துக்கு தேதி குறித்த படக்குழு..!

 
ராதே ஷ்யாம் பட போஸ்டர்

பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நட்த்து வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் ரிலீஸ் தேதி படக்குழு உறுதி செய்துள்ளது. இதுகுறித்த விபரங்களை பார்க்கலாம்.

நடிகர் பிரபாஸ் தற்போது ‘சாலார்’ மற்றும் ‘ராதே ஷ்யாம்’ படங்களில் நடித்து வருகிறார். இதில் ராதே ஷ்யாம் படம் முன்னதாக வெளியாகிறது. யூ.வி. க்ரியேஷன்ஸ் சார்பில் தயாராகும் இப்படம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ப்ரீயட் காதல் கதை பின்னணியில் உருவாகும் இந்த படம் வரும் 20221 ஜனவர் 14-ம் தேதி பொங்கல் பண்டிக்கைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. தெலுங்கில் நேரடியாக வெளியாகும் இப்படம் தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது.

ராதே கிருஷ்ணா குமார் இயக்த்தில் இந்த படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் சச்சின் கதேகர், குணால் ராய் கபூர், பாக்யஸ்ரீ, ஜகபதி பாபு, சத்யன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். 

இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. விரைவில் இதற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கிறது. 

தெலுங்கில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பவன் கல்யாண், ராணா டகுபாதி இணைந்து நடித்துள்ள ’பீமல் நாயக்’ படம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதே நாளில் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்/ஆர்/ஆர் படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

From Around the web