கதாநாயகியை பிரமாண்டமாக அறிமுகம் செய்துவைத்த ராதே ஷ்யாம் படக்குழு..!

 
பூஜா ஹெக்டே

தெலுங்கில் பிரமாண்டான பட்ஜெட்டில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வரும் கதாபாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பரபரப்பாக நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் படம் இந்தியளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இப்படத்தின் கதாநாயகனாக பிரபாஸ் நடித்து வருவதே அதற்கு காரணம். பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளை முன்னிட்டி அவர் சம்மந்தப்பட்ட அப்டேட்டை பலரும் எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் சர்பரைஸாக ‘ராதே ஷ்யாம்’ படத்தின் அவருடைய கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரூ. 350 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வரும் இந்த படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகியுள்ள காதல் படமாக ராதே ஷ்யாம் தயாராகியுள்ளது. தெலுங்கில் நேரடியாக வெளியாகும் இப்படம்  தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் மொழிமாற்றம் செய்து ரிலீஸாகவுள்ளது.

இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார், ராதா கிருஷ்ணகுமார் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்துக்கான ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில் அறிவிக்கவுள்ளது.

From Around the web