விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் படத்தில் இணைந்த பிரபல நடிகை..!!

ஏற்கனவே மேரி கிறிஸ்மஸ் படத்தில் கத்ரீனா கைஃப் கதாநாயகியாக நடித்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு பிரபலமான நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
vijay sethupathi

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீராம் ராகவன், இந்தி சினிமாவில் முன்னணி இயக்குநராக உள்ளார். அவருடைய இயக்கத்தில் வெளியான பத்லாபூர் மற்றும் அந்தாதுன் போன்ற படங்கள் மாற்று சினிமா பாணிக்கு வித்திட்டன.

அதிலும் அவருடைய அந்தாதுன் படம் எல்லா தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு பாராட்டுக்களை பெற்றன. தமிழில் கூட பிரசாந்த் நடிப்பி, அவருடைய தந்தை தியாகராஜன் இயக்கத்தில் ‘அந்தகன்’ என்கிற பெயரில் தயாராகி வருகிறது.

vijay sethupathi

அந்தாதுன் படத்தை தொடர்ந்து அவர் இயக்கி வரும் படம் ‘மேரி கிறிஸ்மஸ்’. இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருடன் கத்ரீனா கைஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஏற்கனவே இப்படத்தில் கத்ரீனா கைஃப் கதாநாயகியாக நடித்து வரும் நிலையில், மேலும் ஒரு பிரபலமான நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர்தான் நடிகை ராதிகா ஆப்தே. தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி போன்ற படங்களில் நடித்து முத்திரை பதித்தவர்.

radhika apte

அதுமட்டுமில்லாமல் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான பத்லாபூர், அந்தாதுன் படங்களிலும் நடித்துள்ளார். இதனால் ஒரு ஹிட் செண்டிமெண்ட் காரணமாக மீண்டும் அவரை தனது படத்தை நடிக்கவைக்க இயக்குநர் முடிவுசெய்துள்ளதாகவும், அதன்காரணமாகவே ராதிகா ஆப்தே ‘மேரி கிறிஸ்மஸ்’ படத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
 

From Around the web