செய்யாத தவறுக்கு மொத்த பழியையும் ஈஸ்வரி மீது போட்ட ராதிகா... கோபத்தின் உச்சியில் கோபி..!  

 
1

அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோவை வெளியிட்டு மக்களை கட்டி போட்டு வைக்கின்றனர் சீரியல் வெளியிடும் தொலைக்காட்சிகள். 

விஜய் டிவியில் சக்கை போடு போட்டு ஒளிபரப்பாகும் சீரியல் பாக்கியலட்சுமி.தற்போது . பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் ராதிகா முன்னே வர ஈஸ்வரி பின்னால் வருகின்றார். இதன்போது ராதிகா தடுக்கி விழுந்து கீழே வயிறு அடிபடுகிறது. இதனால் கமலாவும் மையூவும் ஓடி வந்து தூக்கிக்கொண்டு ஹாஸ்பிடலில் செல்கின்றார்கள்.

ஹாஸ்பிடலில் இருக்கும் ராதிகா, தன்னை ஈஸ்வரிதான் தள்ளிவிட்டதாக கோபியிடம் சொல்கிறார். மேலும் உங்க அம்மா நினைச்ச மாதிரியே நடந்துட்டு என அழுகிறார். டாக்டரும் ராதிகாவின் கரு கலைந்து விட்டதாக அதிர்ச்சி கொடுக்கிறார்.

இதனால் கோபி ஈஸ்வரியிடம் நீங்க நினைச்ச மாதிரியே நடந்துட்டு தானே என்று ஈஸ்வரிக்கு சொல்கிறார். ஆனால் ஈஸ்வரி சொன்ன எதையுமே அவர் கேட்கவில்லை.

இதை தொடர்ந்து ஈஸ்வரி பாக்கியா வீட்டு வாசலில் நிற்க அங்கு பாக்கியா வருகின்றார். இதன் போது ராதிகாவுக்கு கரு கலந்த விடயத்தை சொல்ல பாக்யாவும் அதிர்ச்சி அடைகின்றார். இது தான் அடுத்த வாரத்திற்கான கதைக்களம்.

 

From Around the web