சீரியலில் மாஸாக ரீ என்ட்ரி கொடுக்கும் ராதிகா..!! பிரபல நடிகரின் தந்தையுடன் நடிக்கிறாராம்  

 
1

80-களில் பிரபலமான சினிமா நடிகையாக இருந்தவர் நடிகை ராதிகா. சினிமா வாய்ப்பு குறைந்ததை அடுத்து குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு சன் டிவியில் ஒளிப்பரப்பான 'சித்தி' சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். இந்த சீரியல் ராதிகாவை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.  ராதிகாவை இல்லத்தரசிகள் கொண்டாடினர்‌. பின்னர் அவர் நடிப்பில் வெளியான சில சீரியல்களும் வரவேற்பை பெற்றன. 

kizhakku vasal

 இதையடுத்து சமீப காலங்களில் அவர் நடிப்பில் வெளியான 'சித்தி 2', வாணி ராணி ஆகிய சீரியல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதனால் சில ஆண்டுகள் சீரியல்களில் இருந்து ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் மீண்டும் புதிய சீரியல் மூலம் என்ட்ரி கொடுக்கவுள்ளார். வழக்கமாக சன் டிவியில் மட்டுமே சீரியல்களில் நடித்து வந்த ராதிகா, தற்போது விஜய் டிவி சீரியலில் நடிக்கவுள்ளார். இந்த சீரியலில் ராதிகாவுடன் இணைந்து நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

 பூவே பூச்சூடவா, அபி டெய்லர் ஆகிய சீரியல்களில் நடித்த ரேஷ்மா முரளிதரன் மற்றும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியல் நடிகை அஸ்வினி ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.‌ முன்னணி இயக்குனர் விசுவின் சூப்பர் ஹிட் திரைப்படமான 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தை தழுவி இந்த சீரியல் எடுக்கப்படுகிறது.  'கிழக்கு வாசல்' தலைப்பில் ஒளிப்பரப்பாகவிருக்கும் இந்த சீரியல் குடும்ப பின்னணி கதைக்களத்தை கொண்டது. இந்த சீரியல் விரைவில் ஒளிப்பரப்பாக உள்ளதால் இல்லத்தரசிகள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

From Around the web