நண்பர் விஜய்க்கு ராகவா லாரன்ஸ் வாழ்த்து!
Mar 9, 2025, 08:05 IST

புதுக்கோட்டை மாவட்டம், குருக்களையாபட்டியைச் சேர்ந்த விஷ்ணு என்ற மாணவனின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது கிராமத்திற்கு, நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அறக்கட்டளை மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்துக் கொடுத்தார்.
தொடர்ந்து இன்று நடைபெற்ற அதன் திறப்பு விழாவிலும் நடிகர் ராகவா லாரன்ஸ் பங்கேற்று சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நயன்தாரா தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று கூறியது அவரது விருப்பம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், புதிய கட்சி தொடங்கியுள்ள நண்பர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.