லோகேஷ் கனகராஜ் கதையில் நடிகர் ராகவா லாரன்ஸ்..?

 
1

இந்திய சினிமாவில் இருக்கும் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் .

இவரது இயக்கத்தில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 171 படம் விறுவிறுப்பாக உருவாக உள்ளது . சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் தான் இசையமைக்க உள்ளார்.

இதற்கிடையில் ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள இயக்குனர் லோகேஷ் ‘ஃபைட் க்ளப்’ என்ற படத்தையும் தயாரித்து வழங்கினார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இவரது தயாரிப்பில் அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் உருவாக்க உள்ளார்.

‘ரெமோ’, ‘சுல்தான்’ உள்ளிட்ட இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் கதையில் உருவாகும் இப்படத்துக்கு ‘பென்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நிறைய கதைகளை எழுதி வைத்திருப்பதாக கூறி வந்த நிலையில் தற்போது அந்த கதையில் ஒன்று படமாக உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


 

From Around the web