விஜய் டிவி பாலாவிற்கு ராகவா லாரன்ஸ் கொடுத்த பரிசு…!
Apr 10, 2023, 07:05 IST

நடன இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ருத்ரன்‘. இப்படத்தை தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி, தயாரித்துள்ளார். வரும் ஏப்ரல் 14-ம் தேதி இப்படம் திரையில் வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றது.
இதில் 3000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர். இப்படத்தின் இசை வெளியீட்டில் சிறப்பு விருந்தினராக இயக்குனர்கள் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டனர். இந்நிலையில் விஜய் டிவி கேபிஒய் பாலா பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். இதை அறிந்த ராகவா லாரன்ஸ் இசை வெளியீட்டு மேடையில் அவரது தாயார் கையில் பாலாவிற்கு சுமார் ரூ.10 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.