வெற்றிமாறனின் அதிகாரத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்- மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக்..!

 
அதிகாரம்

இயக்குநர் வெற்றிமாறன் எழுதி தயாரிக்கும் ‘அதிகாரம்’ படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கும் நிலையில், படத்தில் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும் இரண்டு தேசிய விருதுகளை வென்றவருமான வெற்றிமாறன் அதிகாரம் என்கிற கதையை எழுதினார். இது தற்போது திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளது. படத்தை வெற்றிமாறனுடன் சேர்ந்து ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார்.

முன்னதாக வெற்றிமாறன் எழுத்தில் வெளியான உதயம், காக்கா முட்டை, விசாரணை, வடசென்னை போன்ற படங்களையும் இவர்தான் தயாரித்தார். இவருடைய இயக்கத்தில் உருவாகும் ‘ருத்ரன்’ என்கிற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இது மலையாளத்தில் வெளியான ‘ஐயப்பனும் கோஷியும்’ படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தை முடிக்க கையுடன் அதிகாரம் படத்திற்கான பணிகள் துவங்கப்படவுள்ளன. தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 
 

From Around the web