பிறந்தநாளில் காதலரை உலகுக்கு அறிமுகம் செய்துவைத்த ரகுல் ப்ரீத் சிங்..!

 
காதலருடன் ரகுல் ப்ரீத் சிங்

இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தன்னுடைய பிறந்தநாளில் காதல் உறவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கன்னட சினிமாவில் நடிக்க துவங்கிய ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானதை அடுத்து பிரபலமானார். தமிழில் யுவன் என்கிற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். எனினும் தடையற தாக்க படம் அவரை மேலும் பிரபலமாக்கியது.

அதை தொடர்ந்து இந்தியில் 2013-ம் ஆண்டு யாரியான் என்கிற படத்தில் அறிமுகமானார்.  இதற்கிடையில் அவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக மாறிவிட்டார். அதனால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு மீண்டும் தெலுங்கில் ‘தே தே ப்ரியார் தே’ என்கிற படத்தில் நடித்தார். இது சுமாரான வரவேற்பை பெற்றாலும், தொடர்ந்து அவருக்கு இந்தியில் படங்களில் நடிக்கும் அளவுக்கு பிரபலமாக்கியது. இதனால் இந்திய சினிமாவின் அனைத்து மொழிகளிலும் பிரபலமாக உள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பக்கானி என்பவரை காதலிப்பதாக அறிவித்துள்ளார் ரகுல். மேலும் அவருடன் கைகள் கோர்த்து நடக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஜாக்கி பக்கானியும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ரகுல் ப்ரீத் சிங்கை காதலிப்பதை உறுதி செய்துள்ளார். இதன் காரணமாக அனைத்து மாநில ரசிகர்களும் காதல் ஜோடிக்கு வாழ்த்து கூறி சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

From Around the web