காதலரை அறிமுகம் செய்த கையோடு திருமணம் செய்யும் ரகுல் ப்ரீத் சிங்..!
Oct 13, 2021, 11:19 IST
காதலரை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்த சூட்டுடன் சூட்டாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் திருமணம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
கன்னட சினிமாவில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையானார். அதை தொடர்ந்து தமிழில் குறிப்பிட்ட படங்களில் நடித்தார். பிறகு இந்திப் படங்களில் அவர் நடித்து வருகிறார்.
தனது பிறந்தநாளை முன்னிட்டி இந்தி திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ஜாக்கி பாக்னானி என்பவரை காதலிப்பதாக அறிவித்தார் ரகுல். இதற்கு பலரும் வாழ்த்துக்களை கூறி பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அடுத்தாண்டு இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், பல ஆண்டுகளாக காதலித்து வரும் தங்கள் உறவு திருமணத்தில் முடியவுள்ளது மகிழ்ச்சியை தருவதாகவும் ரகுல் ப்ரீத் சிங் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
 - cini express.jpg)