தென்னிந்திய படங்களில் மூளை இல்லாமல் நடிக்க வேண்டும்: வில்லன் விமர்சனம்..!!

நிஜ வாழ்க்கைக்கு சிறிதும் தொடர்பில்லாத வகையில் தான் தென்னிந்திய படங்கள் தயாராவதாகவும், தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடிக்கும் போது மூளையை கழட்டி வைத்துவிட வேண்டும் என்று நடிகர் ராகுல் தேவ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
 
rahul dev

புது டெல்லியைச் சேர்ந்த நடிகர் ராகுல் தேவ், இந்தியில் 2000-ம் ஆண்டு வெளியான ‘சாம்பியன்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழில் 2001-ம் ஆண்டு வெளியான நரசிம்ஹா படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் தான் அதிகமாக நடித்துள்ளார்.

இவருடைய நடிப்பில் வெளியான ‘ சிம்ஹாத்ரி’, ‘மாஸ்’, ’அத்தடு’, ’வர்ஷம்’ போன்ற தெலுங்குப் படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. தமிழிலும் முனி, அரசாங்கம், ஜெய்ஹிந்த் 2, 10 எண்றதுக்குள்ள போன்ற கவனிக்கத்தக்க படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகர் ராகுல் தேவ், தென்னிந்திய படங்களை மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சித்துள்ளார். தென்னிந்திய படங்களில் லாஜிக் விதிமீறல்கள் அதிகமாக இருக்கும். ஹீரோயிச மாயை மற்றும் பொழுதுப்போக்கு அம்சங்களை வைத்து ரசிகர்களை கவர்ந்து விடுகின்றனர்.

நான் தென்னிந்தியப் படங்களில் நடிக்கும் போது, வீட்டில் மூளையை கழட்டி வைத்துவிட்டு தான் படப்பிடிப்புக்கு வருவேன். எனக்கு ஜிம் பாடி, ஆனால் சாதாரணமாக உடம்பை வைத்திருக்கும் ஹீரோ என்னை அடித்து துவம்சம் செய்துவிடுவார். அதை ரசிகர்கள் கொண்டாடும் போது அமைதியாக தான் இருக்க வேண்டும் என்று மிகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

நடிகர் ராகுல் தேவ் தென்னிந்தியப் படங்களில் நடித்த பிறகு தான் சொந்தமாக வீடு, கார் உள்ளிட்டவற்றை வாங்கினார். அதற்கு பிறகு தான் ஒரு திருமணம் கூட நடந்தது. இப்போது செல்வந்தராக மாறிவிட்டதால், ராகுல் தேவுக்கு தென்னிந்தியப் படங்கள் நகைச்சுவையாக தெரிவதாக ரசிகர்கள் பலர் கருத்து கூறி வருகின்றனர்.

From Around the web