ஆணுறை தரத்தை செக் செய்யும் ரகுல் ப்ரீத் சிங்..!

 
ஆணுறை தரத்தை செக் செய்யும் ரகுல் ப்ரீத் சிங்..!

சமூக நலனை மையப்படுத்தி உருவாகும் பாலிவுட் படத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் கதாபாத்திரம் குறித்த விபரம் தெரியவந்துள்ளது.

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, ஸ்பைடர், தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருந்த இவர், தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட் இயக்குநர் தேஸ் தியோஸ்கர் இயக்கும் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார். சமூக கருத்தை மையப்படுத்தி நகைச்சுவை திரைக்கதை அமைப்பில் உருவாகவுள்ள இந்த படத்தில் காண்டம் பரிசோதனையாளராக நடிக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்

தமிழில் பல்வேறு படங்களில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் தேவ் படத்தில் தோல்வியால் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் இருந்து எடுக்கப்பட்டார். இதனால் பாலிவுட் சினிமாவுக்கு சென்றுவிட்ட அவர், அங்கு முகாமிட்டு பல்வேறு படங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார்.

From Around the web