போதை வழக்கில் போலீசார் விசாரணைக்கு ஆஜரான ரகுல் ப்ரீத் சிங்..!

 
ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ராணா டகுபாத்தி
சினிமாத்துறையில் போதை பொருட்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்தார்.

தெலுங்கு சினிமாத்துறையில் போதை பொருள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெலுங்குத் திரையுலக பிரபலங்கள் சிலரிடம் அமலாக்கப் பிரிவு கடந்த இரு தினங்களாக விசாரணை நடத்தி வருகிறது.

தெலுங்கு சினிமா முன்னணி இயக்குநர் பூரி ஜெகந்நாத், நடிகை சார்மி கவுரி உள்ளிட்டோர் கடந்த 2 தினங்களாக நடத்தப்பட்ட விசாரணைக்கு ஆஜராகினர். அவர்கள் இருவரிடமும் 8 மணிநேரத்திற்கு மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் ஹைதராபாத்தில் நடந்த அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். அவரை தொடர்ந்து நடிகர் ராணா டகுபாத்தியிடம் வரும் 6-ம் தேதி விசாரணை நடக்கிறது.
 

From Around the web