லிவிங் டுகெதர் எனக்கு ஒகேதான் - ரைசா வில்சன் ஓபன் டாக்..!!

 
1

மாடலிங் துறையில் கால் பதித்த ரைசா வில்சன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்த ரைசா வில்சனுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு விருதும் கிடைத்தது.இதையடுத்து தனுசு ராசி நேயர்களே, வர்மா,விஷ்ணு விஷாலுடன் எஃப்.ஐ.ஆர், டீகேயுடன் அவரது மல்டி ஸ்டாரர் படம் மற்றும் ஜி.வி. பிரகாஷுடன் ‘காதலிக்க யாருமில்லை’ ஆகியவற்றை முடித்தார். இவர் சமீபத்தில் பிரபுதேவாவின் அடுத்த படத்தில் வரலட்சுமி சரத்குமாருடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமானார்.

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரைசா வில்சன், ரசிகர்களுடன் அவ்வெப்போது உரையாடுவது வழக்கம். அந்த வகையில் ரசிகர் ஒருவர் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் விருப்பம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரைசா, லிவிங் டூகெதர் ரிலேஷன்ஷிப் எனக்கு ஒகே தான். ஆனால் அதற்கு எனக்கு ஒரு காதலன் வேண்டும்? அது இல்லாமல் நான் என்ன நினைக்க முடியும்? என வெளிப்படையாக பதிலளித்து உள்ளார்.

From Around the web