விஜய் ஏற்பாடு செய்திருந்த விருது விழாவில் ராஜபோக விருந்து..!! மெனு இது தான்..! 

 
1

தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்தது பலரிடம் வரவேற்பை பெற்றது. தனது கட்சியை பலப்படுத்தும் சேவைகளில் விஜய் மும்முரமாக செயற்படுகின்றார். அதில் ஒன்றாக தான் இந்த கல்வி விருது விழா.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாவட்டங்களிலும் இருந்து சுமார் 800 மாணவர்களுக்கு நேற்றைய தினம் விருது வழங்கப்பட்டது. அதில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு சால்வை போர்த்தி, ஊக்கத்தொகை வழங்கியதோடு வைர மோதிரத்தையும் வழங்கி இருந்தார்.

மேலும்  இந்த விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு தடபுடலாக ராஜ விருந்தும் வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி சோறு, கதம்ப சாம்பார், தக்காளி ரசம், மோர், வத்த குழம்பு, வடை, அப்பளம், அவியல், வெற்றிலை பாயாசம், தயிர் பச்சடி ,இஞ்சி துவையல், அவரை மணிலா பொரியல் உருளைக்கிழங்கு கார கறி, வெங்காயம் மணிலா உள்ளிட்ட பல சாப்பாடுகள் செய்யப்பட்டு பரிமாறப்பட்டுள்ளன.

From Around the web