உக்ரைனில் ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்புக்கு சுபம் போட்ட ராஜமவுலி..!

 
ஆர்.ஆர்.ஆர்
உக்ரைனில் நடைபெற்று வந்த ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துவிட்டதாக கூறி படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர்.

பாகுபலி படங்களை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. தமிழ், தெலுங்கில் நேரடியாக உருவாகும் இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளார்.

சுதந்திரப் போராட்டக் காலத்தை மையபடுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் ஆலியா பட் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹைதராபாத்தில் இந்த படத்திற்கான பணிகள் நடைபெற்று வந்தன. சில நாட்கள் படப்பிடிப்புக்காக படக்குழு உக்ரைன் சென்றது.

அங்கு ஒரு சில வாரங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்தது. பாடல்கள் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்திற்கான அனைத்து ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்துள்ளது.

இதற்காக உக்ரைனில் இருக்கும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும் ஹைதராபாத் திரும்பியது படக்குழு அனைவரும் செய்தியாளர்களை சந்திக்கின்றனர். அப்போது படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web