ராஜமவுலி படத்தின் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்- ரசிகர்கள் அதிர்ச்சி..!!

 
ராஜமவுலி படத்தின் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்- ரசிகர்கள் அதிர்ச்சி..!!

பாகுபலி பட வரிசையை தொடர்ந்து ராஜமவுலி மிக பிரமாண்டமான பொருட்செலவில் இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் உருவாக்க பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் தேஜா, ஆலியா பட், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிப்பில் ராஜமவுலி இயக்கி வரும் படம் ஆர்.ஆர்.ஆர். ரத்தம் - ரணம் - ரவுத்திரம் என்கிற இந்த படம் தெலுங்கு மற்றும் இந்தியில் நேரடியாக தயாராகி வருகிறது. தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி இந்த படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்டு இரண்டாவது வாரத்தில் வெளியிட இந்த படம் திட்டமிட்டு இருந்தது. அதனால் ஆர்.ஆர்.ஆர் பட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுவிட்டன. அந்த வரிசையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது.

மேலும் திட்டமிட்டபடி ஆகஸ்டு இரண்டாவது வாரத்தில் வெளியிட முடியாத நிலையில், தற்போது இந்த படம் அக்டோபர் மாதம் 13-ந் தேதி தசரா பண்டிகையையொட்டி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதே பிரச்னை தொடரும் பட்சத்தில் ஆர்.ஆர்.ஆர் படம் 2022 ஜனவரியின் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 

From Around the web