தெரு நாய்களை கண்டு பயந்துபோன ராஜமவுலி- ட்விட்டரில் அரசுக்கு கோரிக்கை..!

 
ராஜமவுலி

டெல்லி விமான நிலையத்தின் தற்போதைய நிலையை குறித்து இயக்குநர் ராஜமவுலி அதிருப்தி தெரிவித்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாகுபலியை தொடர்ந்து இயக்குநர் ராஜமவுலி தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் நேரடியாகவும், மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது.

அதன்படி இந்த படத்தை அக்டோபர் மாதம் 13-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. தற்போது இந்த படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி ஆர்.ஆர்.ஆர் படத்துக்கான டப்பிங் மற்றும் பாடல் ஒளிப்பதிவு செய்யும் பணிகளில் ராஜமவுலி பிஸியாகவுள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை ராஜமவுலி டெல்லி விமானம் வந்தடைந்தார். விமானத்தின் பரமாரிப்பு தொடர்பாக ட்விட்டரில் அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார். நான் லூஃப்தானா விமானத்தின் மூலம் டெல்லி விமான நிலையத்திற்கு இரவு 1 மணிக்கு வந்தடைந்தேன். அப்போது, நான் உட்பட அனைத்துப் பயணிகளுக்கும் கொரோனா பிசிஆர் சோதனை விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன. 


அனைவரும் விண்ணப்பப் படிவங்களை தரையில் அமர்ந்தும் சுவற்றில் வைத்து எழுதியும் பூர்த்தி செய்துகொண்டிருந்தார்கள். இப்படி செய்வது நன்றாக இல்லை. விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்ய மேஜைகள் தருவது ஒரு எளிய சேவை. அதோடு, விமான நிலையத்தின் வெளியில் தெரு நாய்கள் அதிகளவில் இருந்தன. இது வெளிநாட்டினருக்கு இந்தியா குறித்து  நல்லப் பார்வையைத் தராது. தயவு செய்து இதனைக் கவனிக்கவும் என்று தன்னுடைய அதிருப்தியை அவர் வெளியிட்டுள்ளார்.
 

From Around the web